உணவு யுத்தம் 

உணவு யுத்தம் 

நூல் பெயர் : உணவு யுத்தம் 
மூலநூலாசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் 
வெளியீடு : விகடன் பிரசுரம் 
நூல் பிரிவு : GMD-334

நூல் அறிமுகம்

இன்று உணவு வெறும் சாப்பாட்டு விஷயமில்லை, அது ஒரு பெரிய சந்தை, கோடி கோடியாகப் பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக்களம், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன, உணவு குறித்து விதவிதமான பொய்களை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன, ஜங்க் புட் எனப்படும் சக்கை உணவுகள் நகரம், கிராமம் எனப் பேதமில்லாமல் ஆக்ரமித்துவிட்டன.

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப் படுகிறோம், நமது ஆரோக்கியக் கேட்டின் முதற் காரணம் உணவு முறை மாறிப்போனதே.

உணவைப் பற்றி ஏன் இவ்வளவு அலட்சியமாக நினைக்கிறோம். உணவுக்காக எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்கிறோம், நமது உணவுச் சந்தையை யார் தீர்மானிக்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களின் உணவுக் கடைகள் நமது வீதிகளை ஆக்ரமிப்பதை எதற்கு அனுமதிக்கிறோம். விடையில்லாத கேள்விகளுக்கான விடை தேடுகிறது உணவு யுத்தம்.

ஆம், நண்பர்களே! இன்று இந்தியாவெங்கும் நடப்பது உணவு அரசியல், பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியாவைச் சூறையாட முயற்சிக்கின்றன. போலியான விளம்பரங்களின் மூலம் மக்களை ஏமாற்றிக் கோடி கோடியாகப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது, ஒரு பக்கம் விவசாயி வஞ்சிக்கப்படுகிறான், மறுபக்கம் சாமானிய மனிதன் நோயாளியாக்கப்படுகிறான்.

உணவுச் சந்தையின் கொள்ளைகள், பாரம்பரிய உணவின் வரலாறு, மாறிவரும் உணவுப் பண்பாட்டால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து வெளிச்சமிட்டுக் காட்டுவதே உணவு யுத்தம்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.