இஸ்லாம் (தொடக்கநிலையினருக்கு)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இஸ்லாம் (தொடக்கநிலையினருக்கு)
ஆசிரியர் : என்.ஐ.மதார்
வெளியீடு : அடையாளம்
நூல் பிரிவு : IA-1201
நூல் அறிமுகம்
ஒரு நாளைக்கு 5 வேளை, கோடிக்கணக்கான மக்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதற்காகக் கஅபாவை நோக்கித் திரும்புகிறார்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டில் திருக்குர்ஆன் மூலமாக இறைத்தூதர் முஹம்மதுக்கு அருளப்பட்டது. அப்போதிருந்து இஸ்லாம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பரவிக் கொண்டே இருக்கிறது.
இஸ்லாம் தொடக்க நிலையினருக்கு என்னும் இந்த நூல் இறைத்தூதர் முஹம்தின் வாழ்க்கையில் தொடங்கி வரலாற்று ரீதியாக இஸ்லாத்தின் தொடக்கங்களையும் மத்தியக் கிழக்கு முழுவதிலும் ஆப்பிரிக்கா முழுவதிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்க பெரு நிலப்பகுதியிலும் அது பரவியிருப்பதை விளக்குகிறது.
உலகம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் பெரும் சாதைனகளை விவரித்து, பிற பண்பாடுகள் மீது இஸ்லாத்தின் தாக்கத்தை ஆராய்கிறது. இஸ்லாமிய மரபுகளுக்கு ஏற்ப இந்நூலில் விளக்கப்பட்டங்கள், இரு பரிமாண நிழலுருவச் சாயலிலும் நிழல்களாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை இஸ்லாமிய கலைவெளி்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாணிகளையும் கொண்டுள்ளன.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.