இளம் வயது சஹாபாக்கள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இளம் வயது சஹாபாக்கள்
தொகுப்பு : K.தாஜுத்தீன் M.A.,
நூல் பிரிவு : IHR-1025
நூல் அறிமுகம்
ஸஹாபி என்றால் யாரைக் குறிக்கும்?
இறைநம்பிக்கை கொண்ட நிலையில் இறைத்தூதரைச் சந்தித்து இறை நம்பிக்கை கொண்ட நிலையிலேயே இறந்த ஒவ்வொரு வரும் நபித்தோழர் (ஸஹாபி) ஆவார்.
உயிருள்ள எடுத்துக்காட்டுகள் தாம் சிறந்த வாழ்க்கைக்கான அழுத்தமான சுவடுகைள ஆழப்பதிக்கின்றன. அவ்வகையில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகச்சிறந்த முன்மாதிரிகளாக நபித்தோழர்கள் தாம் திகழுகின்றார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
இவர்களுள் இளம்வயது ஸஹாபாக்களில்
1. ஹஸன் இப்னு அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
2. ஹுஸைன் இப்னு அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
3. அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
4. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
5. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
6. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலியல்லாஹு அன்ஹு)
7. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு)
8. உஸாமா பின் ஜைத் (ரலியல்லாஹு அன்ஹு)
எண்மரை தெரிவு செய்து அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றை இன்சுவையோடு தென்மொழியாம் தமிழ்மொழியில் தீட்டியுள்ளார் இந்நூல் ஆசிரியர் தாஜுத்தீன் அவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கலீபாக்களின் வரலற்றை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.