இப்னு கஸீர் (பாகம்-6)
நூல் பெயர்:இப்னு கஸீர் (பாகம்-6)
மூல நூலாசிரியர்:இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் رحمه الله
வெளியீடு:ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு: IQ-02–930
நூல் அறிமுகம்:
உயர்ந்தோன் அல்லாஹ்வின் பேரருளால்,திருக்குர்ஆன் விரிவுரைகளில் முதல்தரமானதும் பிரசித்திபெற்றதுமான *தஃப்சீர் இப்னு கஸீர்* தமிழாக்கம் ஆறாம் பாகம் வெளிவந்திருக்கிறது.
இந்தப் பாகத்தில் அல்ஹஜ் (ஹஜ்) அத்தியாயத்தில் (22) 78 வசனங்களும்,அல்முஃமினூன் (இறைநம்பிக்கையாளர்கள்) அத்தியாயத்தில் (23) 118 வசனங்களும் அந்நூர் (ஒளி) அத்தியாயத்தில் (24) 64 வசனங்களும் அல்ஃபுர்கான் (வேறுபடுத்திக்காட்டல்) அத்தியாயத்தில் (25) 77 வசனங்களும் அஷ்ஷுஅரா (கவிஞர்கள்) அத்தியாயத்தில் (26) 227 வசனங்களும் அந்நம்ல் (எறும்புகள்) அத்தியாயத்தில் (27) 93 வசனங்களும் அல்கஸஸ் (வரலாற்றுக் குறிப்புகள்) அத்தியாயத்தில் (28) 88 வசனங்களும் -ஆக மொத்தம் ஏழு அத்தியாயங்களும் 745 திருவசனங்களும் இடம்பெறுகின்றன.
இந்த ஏழு அத்தியாயங்களின் விரிவுரை மொத்தம் 846 பக்கங்களில் இடம்பெறுகிறது. முற்சேர்க்கைகளான அணிந்துரைகள்,கலைச்சொல் விளக்கம், பொருள் அட்டவணை, மூல நூலாசிரியர் வாழ்க்கைக் குறிப்பு முதலான தகவல்கள் 178 பக்கங்களில் இடம்பெறுகின்றன. மொத்தம் 1024 பக்கங்களில் இந்தப் பாகம் வெளிவந்துள்ளது.
திருக்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு,விரிவுரை தமிழாக்கம்,அடிக்குறிப்பு விளக்கங்கள் ஆகியவற்றுக்குக் கீழ்க்காணும் விரிவுரை நூல்களும் அகராதிகளும் பயன்படுத்தப்பெற்றுள்ளன.
1.தஃப்சீர்கள்.
2.நபிமொழித் தொகுப்புகள்.
3.வரலாற்று நூல்கள.
4.அறிவிப்பாளர் தகுதி ஆய்வு நூல்கள்.
5.நபிமொழி விரிவுரைகள்.
6.மொழி அகராதிகள்.
7.இடங்கள் தொடர்பான அகராதிகள்.
8.தகவல் களஞ்சியங்கள்.
9.அறிவியல் நூல்கள்.
10.அட்லஸ்கள்.
11.இணையதள வரவுகள்.
12.விவிலியம்.
அருள்மறை திருக்குர்ஆனைப் பொருள் அறிந்து செயல்படுத்த இந்த மாபெரும் விரிவுரை நிச்சயமாகத் துணை புரியும் என உறுதியாக நம்புகிறோம்.
நீங்களும் படியுங்கள்; உங்கள் நண்பர்களும் படிக்க ஆர்வமூட்டுங்கள்; முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்துங்கள்;
முடிந்தால் இந்நூலை வாசிக்க அஞ்சுமன் அறிவகத்திற்கு வாருங்கள்.
இறைமறை குர்ஆனை ஓதி,அதன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கப் படியுங்கள் இந்த விரிவுரையை.பின்பற்றுங்கள் வாழ்க்கையில்.
வாசிப்புதான் அறியாமையை அகற்றும்.அறியாமை அகன்றால் அகத்தில் ஒளி பிறக்கும்.அவ்வொளி உங்களை வழிநடத்தும்.இம்மையிலும் மறுமையிலும் வெற்றிவாகை சூடலாம்.அல்லாஹ் அருள்புரிவானாக!
இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.