இப்னு கஸீர் (பாகம்-5)
நூல் பெயர்:இப்னு கஸீர் (பாகம்-5)
மூல நூலாசிரியர்:இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் رحمه الله
வெளியீடு:ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு: IQ-02–931
நூல் அறிமுகம்:
உயர்ந்தோன் அல்லாஹ்வின் பேரருளால்,திருக்குர்ஆன் விரிவுரைகளில் முதல்தரமானதும் பிரசித்திபெற்றதுமான *தஃப்சீர் இப்னு கஸீர்* தமிழாக்கம் ஐந்தாவது பாகம் வெளிவந்திருக்கிறது.
இந்தப் பாகத்தில் அந்நஹ்ல் (தேனீ) அத்தியாயத்தில் (16) 128 வசனங்களும்,அல்இஸ்ரா (இரவுப் பயணம்), அல்லது பனூ இஸ்ராயீல் (இஸ்ரவேலர்கள்) அத்தியாயத்தில் (17) 111 வசனங்களும் ,அல்கஹ்ஃப் (ஒரு குகை) அத்தியாயத்தில் (18) 110 வசனங்களும், மர்யம் அத்தியாயத்தில் (19) 98 வசனங்களும், தாஹா அத்தியாயத்தில் (20) 135 வசனங்களும்,அல்அன்பியா (நபிமார்கள்) அத்தியாயத்தில் (21) 112 வசனங்களுமாக மொத்தம் ஆறு அத்தியாயங்களில் 694 திருவசனங்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஆறு அத்தியாயங்களின் விரிவுரை மொத்தம் 950 பக்கங்களில் இடம்பெறுகிறது. முற்சேர்க்கைகளான அணிந்துரைகள்,கலைச்சொல் விளக்கம், பொருள் அட்டவணை, மூல நூலாசிரியர் வாழ்க்கைக் குறிப்பு முதலான தகவல்கள் 186 பக்கங்களில் இடம்பெறுகின்றன. மொத்தம் 1136 பக்கங்களில் இந்தப் பாகம் வெளிவந்துள்ளது.
திருக்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு,விரிவுரை தமிழாக்கம்,அடிக்குறிப்பு விளக்கங்கள் ஆகியவற்றுக்குக் கீழ்க்காணும் விரிவுரை நூல்களும் அகராதிகளும் பயன்படுத்தப்பெற்றுள்ளன.
1.தஃப்சீர் அத்தபரீ.
2.தஃப்சீர் அல்குர்துபீ.
3.தஃப்சீர் அல்மனார்.
4.தஃப்சீர் மாஜிதீ.
5.தஃப்சீர் அல்ஜலாலைன்.
6.ஸஃப்வத்துத் தஃபாசீர்.
7.தஃப்சீர் அல்பஹ்ருல் முஹீத்.
8.தஃப்சீர் அல்கபீர்.
9.நபிமொழித் தொகுப்புகள்.
10.ஃபத்ஹுல் பாரீ.
11.உம்தத்துல் காரீ.
12.இர்ஷாதுஸ் ஸாரீ.
13.அவ்னுஸ் மஅபூத்.
14.அல்மின்ஹாஜ்.
15.துஹ்ஃபத்துல் அஹ்வதீ.
16.தஹ்தீபுத் தஹ்தீப்.
17.தஹ்தீபுல் கமால்.
18.அல்இஸாபா.
19.மீஸானுல் இஃதிதால்.
20.மஜ்மஉஸ் ஸவாயித்.
21.முஅஜமுல் புல்தான்.
22.லிசானுல் அரப்.
23.ஃபிக்ஹுஸ் ஸுன்னா.
24.சீரத் இப்னு ஹிஷாம்.
25.உசுதுல் ஃகாபா.
26.அல்முன்ஜித்.
27.தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்.
28.தஃப்சீர் அந்நசஃபி.
29.தஃப்சீர் ஃபி ழிலாலில் குர்ஆன்.
30.தஃப்சீர் அல்ஆலூசீ.
31.அல்பிதாயா வந்நிஹாயா.
32.அர்ரவ்ளுல் உன்ஃப் (சுஹைலீ).
33.அஜாயிபு கிர்மானீ.
34.குர்ஆன் அட்லஸ்.
35.அரபி தகவல் களஞ்சியம்.
அருள்மறை திருக்குர்ஆனைப் பொருள் அறிந்து செயல்படுத்த இந்த மாபெரும் விரிவுரை நிச்சயமாகத் துணை புரியும் என உறுதியாக நம்புகிறோம்.
நீங்களும் படியுங்கள்; உங்கள் நண்பர்களும் படிக்க ஆர்வமூட்டுங்கள்; முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்துங்கள்;
முடிந்தால் இந்நூலை வாசிக்க அஞ்சுமன் அறிவகத்திற்கு வாருங்கள்.
இறைமறை குர்ஆனை ஓதி,அதன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கப் படியுங்கள் இந்த விரிவுரையை.பின்பற்றுங்கள் வாழ்க்கையில்.
வாசிப்புதான் அறியாமையை அகற்றும்.அறியாமை அகன்றால் அகத்தில் ஒளி பிறக்கும்.அவ்வொளி உங்களை வழிநடத்தும்.இம்மையிலும் மறுமையிலும் வெற்றிவாகை சூடலாம்.அல்லாஹ் அருள்புரிவானாக!
இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.