இன்றைய விண்வெளி
நூல் பெயர் : இன்றைய விண்வெளி
நூலாசிரியர் : மோகன் சுந்தர ராஜன்
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
நூல் பிரிவு : GSC – 2430
நூல் அறிமுகம்
விண்வெளிக் காலத்தின் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள், குறிப்பாக இந்தியாவின் சாதனைகள், எளியநடையில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் சிறப்புப் பகுதிகள்:
*செயற்கைக் கோள்களுக்கு இயற்கை அளித்துள்ள சுற்றுப் பாதைகள்.
*தகவல் தொடர்பு ஒளிப்பரப்பு, வானிலை ஆய்வு ஆகியவற்றில் ஏற்பட்டுவரும் புரட்சியின் அடிப்படை நெறிமுறைகள்.
*விண்ணை அடைய உதவும் ஏவுகணைகளும், மண்ணைக் காக்க உதவும் எறிபடைகளும் இயங்கும் முறைகள்.
*உளவறியும் கோள்களும் இடமறியும் கோள்களும் விரல் நுனியில் உலகத் தொடர்பு அளிக்கும் கோள்களும் தோற்றுவிக்கும் புதுமைகள்.
*நாம் வசிக்கும் ‘நீல அணிகலனின்’ உண்மை நிலையைச் சுட்டிக் காட்டும் தொலை உணரக் கோள்களின் வளர்ச்சியும் பயன்பாடுகளும்.
*நுண் ஈர்ப்பு விசையுள்ள விண்கலன்களில் உடலும், உயிரினங்களும் உய்யுமா என்று அறிய நடைபெறும் பல அரிய பரிசோதனைகள்.
*ஒலிக்கும் விண்புள்ளிகள், துடிக்கும் விண்மீன்கள், ஓடும் விண்மீன் திரள்கள், பலர் தேடும் கரும்பொருள், காண இயலாத கருங்குழிகள் போன்ற பல விண்வெளி அற்புதங்கள்.
இந்நூலின் ஆசிரியர் மோகன் சுந்தரராஜன் பல விருதுகளைப் பெற்ற அறிவியல் எழுத்தாளர். இவரது ‘விண்வெளி வெற்றி’ என்ற தமிழ் நூல், சோவியத் லேண்ட் நேரு விருது பெற்றது. தொலைக்காட்சியில் பல அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்கள். அறிவியலில் சிறந்த வானொலி நிகழ்ச்சிக்காக ஆகாசவாணி விருதையும் பெற்றிருக்கிறார்
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.