இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி
ஆசிரியர் : சையித் இப்ராஹீம் எம்.ஏ., எல்.டி.,
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GHR-02 3306
நூல் அறிமுகம்
இந்தியாவுக்கு இஸ்லாம் வந்த காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை முஸ்லிம் ஸுல்தான்களுடைய ஆட்சியின் உண்மையான விளக்கத்தை இந்நூல் எடுத்துரைக்கிறது.
இஸ்லாமிய வரலற்றுத் தொகுப்பில் இந்திய முஸ்லிம் ஸுல்தான்களின் ஆட்சி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதற்பகுதி “துர்க்”, “படான்”, “அப்கான்” ஸுல்தான்களின் ஆட்சி. இரண்டாம் பகுதி, “முகல்” ஸுல்தான்களின் ஆட்சி.
இதில் ஒரு புதிய முறையில் மின்ஹாஜுஸ் ஸிராஜ், தபகாதே நாஸிரி, ஃபரிஷ்த்தா, ஸியாவுத்தீன் பரனீ முதலிய மூல நூல்களின் ஆதாரத்தல் தப்பெண்ணங்களை அகற்றி உண்மையான வரலாற்றுச்
செய்திகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது பொதுமக்களுக்கும், குறிப்பாகக் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலுமுள்ள மாணவர்களுக்கும் நற்பயன் அளிக்கக்கூடியது.
இந்நூலைப் படித்தரிவதன் மூலம் முஹம்மது பின் காஸிம், மஹ்மூத் கஸ்னவீ, முஹம்மத் துக்லக், அவ்ரங்கஸேப் ஆலம்கீர் முதலான மன்னர்களின் உண்மையான சரிதையை அறிந்துகொள்ளக் கூடும். எனவே இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.