அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை பாகம்-1
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை பாகம்-1
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IH-02
நூல் அறிமுகம்
இஸ்லாத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளில் மிகவும் ஆதாரப்பூர்வமான நூற்களாக “ஸிஹாஹு ஸித்தா” என்று சொல்லக்கூடிய “ஆறு ஆதார பூர்வமான கிரந்தங்கள்” திகழ்கின்றன பன்னூலாசிரியர் அப்துற் றஹீம் அவர்கள் அந்த ஆறு நூல்களில் உள்ள நபிமொழிகளை 3 பாகங்கள் கொண்ட ஒரே புத்தகமாக தமிழ் மொழியில் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.
நபி மொழிகளை அறிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த நூலாக இந்நூல் திகழ்கிறது. காரணம் ஆறு ஆதாரப்பூர்வமான நூல்களான புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இருக்கக்கூடிய நபிமொழிகள் அனைத்தையும் ஒரே புத்தகமாக தொகுத்தது மட்டுமல்லாமல், பயன்படுத்துவதற்கு இலகுவாக இருப்பதற்காக அந்த நபிமொழிகள் அனைத்தையும் அகரவரிசையில் தனித்தனி தலைப்புகளாக வரிசைபடுத்தி இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஏதேனும் ஒரு தலைப்பில் நமக்கு தேவையான நபிமொழிகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இந்நூலாசிரியர் அப்துற் றஹீம் அவர்கள் “இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தை” அகர வரிசையில் நான்கு பாகங்களாக தொகுத்திருக்கிறேன் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று பாகங்கள் கொண்ட கொண்ட நூலின் முதல் பாகம் இது. இந்நூலில் ‘அ’ முதல் ‘கு’ வரையிலான தலைப்புகளில் நபிமொழிகள் தரப்பட்டுள்ளது
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.