அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

Image may contain: 1 person, text

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அரவிந்த் கெஜ்ரிவால்
ஆசிரியர்: ஜெகாதா
பதிப்பகம் : நக்கீரன் வெளியீடு
நூல் பிரிவு : GHR-4.2

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால், அரசியல் ஆர்வமற்ற இளைஞர் சக்தியைத் தேர்தல் களத்திற்குக் கொண்டு வந்தவர், மக்களிடம் நேரடியாக சென்று அவர்களைப் பிரச்சாரம் செய்ய வைத்தவர் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறியச் செய்து அதனடிப்படையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார், மொத்தத்தில், வழக்கமான அரசியல் ஆடம்பரங்கள், படாடோபங்கள், அதிகார பலம், கூலிப்பட்டாளம், பணவிநியோகம் இவற்றைப் புறக்கணித்து, சாதாரண மக்களைக் களத்தில் இறக்கி சாதாரண மக்களின் வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றி அடைந்திருப்பவர்தான் கெஜ்ரிவால்

தற்போதைய அரசியல் சூழல்களில் அவரால் 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கமுடியுமா என ஏராளமான கேள்விகள் உள்ள நிலையில் தான் மாற்றங்களின் தலைவன் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற இந்த நூலை அருமை அண்ணன் ஜெகாதா நமக்கு வழங்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன் தாசனாக நன்னை வளர்த்துக்கொண்டு அதனை சுருக்கமாக ஜெகாதா என அடையாளப்படுத்தி அந்தப் பெயரிலேயே படைப்புகளைத் தரும் திறமைக்கு எழுத்தாளர் தான் இவர் நாவல்கள், சிறுகதைகள், வரலாறுகள், ஆன்மிகக் கட்டுரைகள் என இவர் தொடாத துறைகளே இல்லை. தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கொடி நாட்டும் அண்ணன் ஜெகாதா, வெற்றியின் நாய்கள் கெஜ்ரிவால் பற்றிய புத்தகத்தை விரைவாகவும் விரிவாகவும் தந்திருக்கிறார்.
*நக்கீரன் கோபால்*
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.