அமெரிக்கா போகணுமா?
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அமெரிக்கா போகணுமா?
ஆசிரியர் : சுவடு ஷங்கர்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GA – 678
நூல் அறிமுகம்
அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிசுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட், விசாவில் தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
அமெரிக்கக் கல்லூரியில் படிப்பு, அமெரிக்க மாப்பிள்ளையுடன் திருமணம், அமெரிக்காவில் வேலை… அட்லீஸ்ட் அமெரிக்க கம்பெனியின் இந்தியக் கிளையிலாவது வேலை. ஒன்றும் இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு ஒருமுறை பயணமாவது செய்துவிடவேண்டும். ஒருவர விடாது கேட்டுப்பாருங்கள், இதில் ஒன்றாவது அவர்களது கனவில் வந்திருக்கும்.
அமெரிக்கா போவது எப்படி? யார் வேண்டுமானாலும் போகலாமா? அந்த நாட்டில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடன் எப்படிப்ப் பழகுவது? அங்குள்ள பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிக்கலாம்? அமெரிக்காவில் சில வருடங்கள் வசிக்க வேண்டுமானால் என்னென தெரிந்திருக்க வேண்டும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் சுவையான விளக்கங்களைக் கதை சொல்லும் பாணியில் சொல்லித்தருகிறார் ஆசிரியர் சுவடு ஷங்கர்.
மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.