அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)

அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : அமுல் (வளர்ந்து சாதித்த சரித்திரம்)
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : GA-829

நூல் அறிமுகம்

இந்தியாவில் அரசுத்துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவனங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு.

கூட்டுறவு த் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்க முடியும், உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்.

எந்தக் கூட்டுறவு முயற்சியும் அமுல் அளவுக்கு வெற்றி கண்டதில்லை.

வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட திரிபுவன்தாஸ் படேல், வர்கீஸ் குரியன், ஹரிசந்த் த லாயா – அவர்களோடு இணைந்த பல ஆயிரம் ஆனந்த் மாவட்ட கிராம மக்கள். இவர்களது போராட்டமே அமுலின் புரட்சி சரித்திரம்.

ஒரு காந்தியவாதி. காந்தி, படேல் ஆகியோரிடம் பழகி, அவர்களது சொல்படி, குஜராத் கிராம மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பாடுபடுபவர்.

இரண்டாமவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். வெளிநாட்டுக்குச் சென்று, படித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். இந்திய நிதி அமைச்சருக்கு மருமகன். இவர் கிராமத்தில் போய் என்ன செய்யப் போகிறார்-
மற்றொருவர் தொழில்நுட்ப வல்லுனர். நண்பனுக்காக இருக்கும் வேலையை விட்டுவட்டு கிராமத்தில் சென்று பால் பதனிடும் இயந்திரங்களுடன் கடைசிவரை தன் வாழ்க்கையை வாழ்ந்தவர். இவர்கள் மூவரும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது அமுலின் வெற்றி.

அமுலின் வளர்ச்சியைப் பின்பற்றினால் இந்தியாவின் கிராமங்கள் விடியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இத்தகைய வெற்றி நூல்களைப் படித்து வாழ்வில் வெற்றிபெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.