அதே வினாடி
நூல் பெயர் : அதே வினாடி
நூலாசிரியர் : நாகூர் ரூமி
வெளியீடு : 6th சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GMA-1387
நூல் அறிமுகம்
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுய முன்னேற்றத்துக்கான நூல்கள் அநேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீர்வு. தமிழின் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உண்மைகளும் கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்றால் அது இந்த நூலில்தான். ஆமாம், நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையால் நகைச்ச்சுவையோடு அனைத்து உண்மைகளும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு நல்ல பொக்கிஷமாக அமையும். இந்த நூலை படித்து முடித்த அதே வினாடி உங்கள் வாழ்க்கை நல்ல வழியில் திசை மாறும் படித்து பாருங்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.