அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
நூல் பெயர் : அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
மூல ஆங்கில நூல் ஆசிரியர் : ஸ்டீபன் ஆர்.கவி
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
நூல் பிரிவு : GMA-1912
நூல் அறிமுகம்
இப்புத்தகத்தில் ஸ்டீபன் ஆர்.கவி, மக்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முழுமையான ஒருங்கிணைந்த, கொள்கை அடிப்படையிலான அணுகுமுறை ஒன்றை முன்வைக்கிறார். ஆழமான உள்நோக்குகள் மற்றும் சுவையான உண்மைச் சம்பவங்களின் வாயிலாக, நியாயம், நாணயம், சேவை மற்றும கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை அவர் இதில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
1932ம் ஆண்டில் பிறந்த ஸ்டீபன் ஆர்.கவி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற தலைமைத்துவ வல்லுனர், குடும்ப உறவு நிபுணர், ஆசிரியர், நிறுவன ஆலோசகர் மற்றும் நூலாசிரியர். நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கை முறையையும் தலைமைத்துவத்தையும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இந்நூலைப்பற்றி ஸர்ச் ஆஃப் எக்ஸலென்ஸ் புத்தகத்தின் ஆசிரியர் -டாம் பீட்டர்ஸ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இந்த அற்புதமான நூல் உங்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்று.”
இது போன்ற இன்னும் ஏராளமான சுயமுன்னேற்ற நூல்களைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.