அண்ணலார் கற்று தந்த தலைமைத்துவம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: அண்ணலார் கற்று தந்த தலைமைத்துவம்
ஆசிரியர் : அதிரை அஹ்மத்
பதிப்பகம் இலக்கியச்சோலை பதிப்பகம்
பிரிவு :IA -01
முற்ற முற்றத் தலைவரைப் பின்பற்றும் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும், தம் கருத்துக்கும் மதிப்புண்டு என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டு, ஒரு செயல்பாட்டில் விளையும் முடிவில் தமக்கும் பங்குண்டு என்ற பொறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.
அவர்கள் தலைவரால் மதிக்கப்பட்டு, தமது கருத்தையும் பதிவு செய்வதால், ஒன்றித்த கருத்து வலுப்பெற வாய்ப்புண்டு.
சில வேளை, உள்ளூர் நிலவரங்களைத் தொண்டர்களும் தோழர்களும் தலைவரைவிடக் கூடுதலாக அறிந்திருப்பார்கள். அவ்வடிப்படையில், அவர்களின் கருத்துப் பதிவு பயனுள்ளதாக அமைய வாய்ப்புண்டு.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர், ஒரு வேளை, அத்தோழர்கள் முடிவெடுக்க வேண்டிய தலைமைப் பொறுப்பைச் சுமந்தவர்களாக முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு. அதற்கான பயிற்சியாக இக்கலந்தாலோசனை பயன்படக் கூடும்.
தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் கருத்து ஒன்றித்த ஈடுபாடு உண்டாகும். அவரவர் சமூக இயல்புகளைப் பகிர்ந்துகொண்டு, பொதுவான நலனுக்காகவும், இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியாகவும் அமைய அதிக வாய்ப்புண்டு.
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.