ஹராங்குட்டி

ஹராங்குட்டி

எழுத்தாளரும் கவிஞரும் ஊடகவியலாளரும் குறுந்திரைப்பட நெறியாளருமான முஸ்டீன். தமக்கெனத் தனித்துவமான ஆளுமையும் ஆற்றலும் கொண்ட ஒருவராக விளங்குகின்றார். ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுதி மூலம் துணிச்சலும் கவியாற்றலும் கொண்ட கவிஞராகத் தம்மை இனங்காட்டிக் கொண்டார். இந்தச் சிறுகதைத் தொகுதி வாயிலாகத் தமது இன்னொரு பக்கப் பரிமாணத்தை முஸ்டீன் வெளிக்கொணர்கிறார்.

முஸ்டீனின் சிறுகதைகள், அவரை இலங்கையின் தனித்துவ மான ஒரு சிறுகதையாசிரியராக இனங்காட்டுகின்றன. அவர் தமது சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் கதைப்பொருள்கள், அநேகமாகப் பிறரால் கையாளப்படாதவை. முஸ்டீனின் கதை சொல்லும் முறை, பாத்திரவார்ப்பு, அவரது நடை ஆகியன அவருக்கே உரியவை. இதுவரை இலங்கை எழுத்தாளர்கள் தரிசித்திராத பக்கங்களில் அவரது பார்வை படர்ந்திருக்கிறது. முஸ்டீன் தமது இடையறா எழுத்து முயற்சிகள் வாயிலாக. எதிர்காலத்தில் தம்மை மேன்மேலும் வளப்படுத்துவாரென்று நம்புவதற்கு இடமுண்டு. அவரது துணைவி ஷாமிலாவும் ஒரு கவிஞர் என்பது. முஸ்டீனுக்குப் பக்கபலமான ஒன்று. இருவரும் மனமொத்த இலக்கியத்தம்பதி என்பதனால். அவர்களிடமிருந்து இலக்கியவுலகம் இன்னும் அதிகம் எதிர்பார்க்க இடமிருக்கிறது.

/ Uncategorized

Share the Post

About the Author

Comments

Comments are closed.