ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 3)

ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 3)

நூல் பெயர் : ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 3)
மூலநூலாசிரியர் : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம் : ரஹ்மத் பதிப்பகம், சென்னை
வெளியீடு : ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை
நூல் பிரிவு : IH-01–967

நூல் அறிமுகம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் பிரபல நபிமொழித் தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கத்தின் மூன்றாவது பாகம் உங்கள் கரங்களில் தவிழ்கின்றது. இந்த அரிய தொண்டினைப் புரிய அருள் புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நூலில் அடிமையை விடுதலை செய்தல்(அல் இத்க்), வியாபாரம்(அல்புயூஉ), தோப்புக் குத்தகை(அல்முசாக்காத்), பாகப் பிரிவினை(அல் ஃபராயிள்), அன்பளிப்புகள்(அல்ஹிபாத்), இறுதி விருப்பம்(அல் வஸிய்யத்), நேர்த்திக்கடன்(அந்நத்ர்), சத்தியங்கள்(அல் அய்மான்), அல்கஸாமா, குற்றவியல் தண்டனைகள்(அல் ஹுதூத்), நீதித்துறை தீர்ப்புகள்(அல் அக்ளியா), கண்டெடுக்கப்பட்ட பொருள்(அல்லுக்த்தா), அறப்போர்(அல்ஜிஹாத்), ஆட்சியதிகாரம்(அல் இமாரத்), வேட்டைப் பிராணிகள்(அஸ் ஸைத்), குர்பானிப் பிராணிகள்(அல் ஆளாஹீ), குடிபானங்கள்(அல் அஷ்ரிபா), ஆடையும் அலங்காரமும்(அல்லிபாஸ் வஸ்ஸீனா) மற்றும் நற்பண்புகள்(அல் ஆதாப்) ஆகிய 19 அத்தியாயங்களும்(20-38) 1358 ஹதீஸ்களும்(3005-4363) இடம்பெறுகின்றன.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள அரபி மூலமாகட்டும் தமிழாக்கமாகட்டும் முழுமையானவை; சுருக்கம் அல்ல. சுருக்கப் பிரதிகளில் இல்லாத நிறைவும் தெளிவும் இதில் உண்டு. பல மார்க்க அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் பார்வையிட்டு, அவர்கள் அளித்த திருத்தங்கள் ஏற்கப்பட்டு, மொழிபெயர்ப்புக் குழுவால் முறையாக எழுதி வெளியிடப்பெற்ற சிறப்பு இதற்கு உண்டு.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.