ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம் 

ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம் 

நூல் பெயர் :ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம் 
மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)
பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன்
வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் 
நூல் பிரிவு :GAR–2438

நூல் அறிமுகம்:

ஆரம்ப காலங்களில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஏ.சி.யும், ரெப்ரிஜிரேட்டர்களும்(ஃபிரிட்ஜ்) பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர் எல்லாம் ஏ.சி.யும், பிரிட்ஜும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதே போல எல்லா அலுவலகங்களிலும் ஏ.சி. பொருத்த தொடங்கி விட்டனர். ஆகவே தினமும் பல ஆயிரக்கணக்கான ஏ.சி.யும், ஃபிரிட்ஜும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் எல்லோர் வீட்டிலும், எல்லா அலுவலகங்களிலும் ஏ.சி, & பிரிட்ஜ் பயன் படுத்துகின்ற நிலைக்கு காலம் மாறிவிடும். ஏ.சி., பிரிட்ஜ் எல்லாம் ஆடம்பர பொருள் என்ற நிலை மாறி அவைகள் அத்தியாவசியப் பொருள் என்ற நிலைக்கு காலம் மாறிவிட்டது.

ஆகவே, ஏர்கண்டிஷன், ரெப்ரிஜிரேட்டர், (பிரிட்ஜ்) மெக்கானிசம் கற்றுக் கொண்டால் நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். இந்த தொழில் செய்பவர்களுக்கு உள் நாட்டில் மட்டும் அல்லாமல் பல அயல் நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சுயமாக தொழில் செய்பவர்களுக்கு மேலும் பன்மடங்கு வருமானம் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை படித்து ஏ.சி & பிரிட்ஜ் மெக்கானிசம் கற்க முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பிவிட்டால் அது நிச்சயமாகஉங்களால் முடியும். அதுவும் ஒரே மாதத்தில் கற்க முடியும்.

சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் பணி செய்தும், தொழிற் கல்வி நிலையங்களில் பணிபுரிந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், பல தொழிற் கல்வி புத்தகங்களை எழுதியும் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆசிரியர் எழுதிய பல எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் புத்தகங்கள் யாவும் தமிழக நூலக ஆணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டன. ஆசிரியரின் புத்தகங்களை படித்து தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளத்தின்(இன்டர்நெட்) மூலமாக மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து பல விரிவான விளக்கப் படங்களுடன் இப் புத்தகம் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்களும் இப்புத்தகத்தை படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

ஆகவே, நீங்களும் இப் புத்தகத்தைப் படித்துப் பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *