ரியாளுஸ்ஸாலிஹீன் நபிமொழி தெளிவுரை
நூல் பெயர் : ரியாளுஸ்ஸாலிஹீன் நபிமொழி தெளிவுரை
தொகுப்பாசிரியர் : இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம் : மஸ்தான் அலீ பாகவி,உமரி
வெளியீடு : இஸ்லாமிக் சென்டர்
நூல் பிரிவு : IHA-03–1066
நூல் அறிமுகம் :
அல்லாஹ்வின் பேருதவியினால், எல்லாக் காலத்திலும் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், மார்க்க அறிஞர்கள், மாமேதைகள் அனைவரின் கருத்திலும் கவனத்திலும் அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள் இடம்பெற்றன! அனைவரின் வாழ்வையும் பயன்படுத்தின! ஹதீஸ்களை மனனம் செய்வதும் ஆராய்வதும் அவற்றிற்கு நூல் வடிவம் கொடுப்பதும் இவ்வுலகில் தொடர் பணிகளாயின! பல்வேறு கோணங்களில் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப் பட்டு முஸ்னதிகளிலும் ஸிஹாஹ்க்களிலும் சுன்னாஹ்க்களிலும் முஃஜம்களிலும் வரிசைப்படுத்தப்பட்டன!
இத்தகைய பணிகளில் பங்கு பெற்றவர்களுள் ஒருவர்தாம் இமாம் அபு ஜக்கரியா யஹ்யா அந் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்!
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவை யாவும் மக்களின் வரேவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன. மார்க்க அறிஞர்கள் அந்நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர். தாங்களும் பயண்பெற்றனர். மக்களும் பயனளித்தனர்!
இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் – பண்டிதர் அனைவரிடையேயும் அறிமுகமான நூல்தான் ரியாளுஸ்ஸாலிஹீன் மின் கலாமி ஸையிதில் முர்ஸலின்!
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.