ரியாளுஸ்ஸாலிஹீன் – நபிகளாரின் பொன்மொழிகள்
நூல் பெயர் : ரியாளுஸ்ஸாலிஹீன் – நபிகளாரின் பொன்மொழிகள்
மூலநூலாசிரியர் : இமாம் அபூ ஜக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அந் நவவீ رحمه الله
தமிழாக்கம் : மவ்லவி.K.M.முகம்மது மைதீன் உலவி
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : IH-02–2276
நூல் அறிமுகம்
இந்நூலில் ஒரு நியதியை கடைப்பிடித்துள்ளார்கள். அதாவது, தெளிவான, ஆதாரப்பூர்வமான நபிமொழியை மட்டும் தான் சொல்கிறார்கள். அதுவும் ஆதாரப்பூர்வமான நூல்களென்று பிரபலமான நபிமொழித் தொகுப்பு ஒன்றுடன், அது இனைத்துச் சொல்லப்படும். பாடங்களின் தொடக்கத்தில், சங்கைமிகு குரானின் திருவசனங்களைக் கூறுவேன். உச்சரிப்புத் தேவை எனும் இடத்தில் உள்ளடக்கிய அர்த்தத்துக்கு விளக்கம் தேவை எனும் இடத்தில் நுணுக்கமான, எச்சரிக்கையான விளக்கத்தை அணிவிக்கிறன்.
இந்நூல் நிறைவடைந்தால், கவனத்துடன் படிப்போருக்கு நன்மைகளின் பக்கம் வழிநடத்திச் செல்லக் கூடியதாகத் திகழும் என்றும், எல்லா வகையான தீமைகள் – நாசகார பாவங்களை விட்டும் அவர்களைத் தடுக்கும் என்றும் ஆதரவு வைக்கிறார்கள்.
இந்நூலிலிருந்து பயன்பெறும் வாசகர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில், அவர்கள் துஆ( பிரார்த்தனை) செய்ய வேண்டும் என்றார்கள். மேலும், என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அன்பர்கள் அனைவருக்காகவும், அனைத்து முஸ்லிம்களுக்காகவும் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதுதான்.
நாங்கள் நம்பியிருப்பது கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வைத்தான். எங்கள் பணிகளை ஒப்படைத்திருப்பதும் அவனிடமே! நாங்கள் முழுவதும் சார்ந்திருப்பதும் அவனையே! அல்லாஹ் எனக்குப் போதுமானவன்; அவனே சிறந்த முறையில் பொறுப்பெர்ப்பவன். நன்மைகள் மீது சக்தி பெறுவதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தவன். நுண்ணறிவாளன்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.