யுபிஎஸ், மானிட்டர் & சிஸ்டம் மெக்கானிசம்
நூல் பெயர் : யுபிஎஸ், மானிட்டர் & சிஸ்டம் மெக்கானிசம்
மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)
பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன்
வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு :GAR–2433
நூல் அறிமுகம் :
இன்றைய உலகில் கம்ப்யூட்டர் இல்லாமல் இனி எதையும் செய்ய முடியாது, என்ற அளவிற்கு கம்ப்யூட்டர் மிக அவசியமான சாதனமாகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலையை ஒரு கம்ப்யூட்டர் மிக எளிதாகச் செய்து முடித்து விடுகிறது. பல்வேறு துறைகளில் பல்வேறு வேலைகளை கம்ப்யூட்டர்கள் செய்து விடுகின்றன. ஆகவே, எல்லாத் துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்படுவதால் அதன் பயன்பாடு ஒவ்வொன்றையும் எளிதில் சொல்லிவிட முடியாது. ஆனால் எந்த வகை கம்ப்யூட்டராக இருந்தாலும் அதைப் பழுது பார்ப்பவர்கள் கம்ப்யூட்டர் மெக்கானிக் ஆவர். இவர்கள் தான் ஹார்டுவேர் இன்ஜினியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இரண்டு ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறிய ஸ்பேர் பார்ட் பழுதடைந்து விட்டாலும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கம்ப்யூட்டர், டி.வி. போன்ற சாதனங்கள் இயங்காது. ஒரு நல்ல டி.வி. மெக்கானிக்கிடம் நமது டி.வி.யை பழுது பார்க்க கொடுத்தால், அந்த டி.வி.யில் எந்த உபரி பாகம் (ஸ்பேர் பார்ட்) கெட்டு விட்டதோ அதை மட்டும் புதியதாக மாற்றி டி.வி.யை பழுது பார்த்துக் கொடுத்து விடுவார்கள். கம்ப்யூட்டர்களையும் அவ்வாறு தான் பழுது பார்க்க வேண்டும்.
ஆனால், இந்தக் காலத்தில் பெரும்பாலான ஹார்டுவேர் இன்ஜினியர்கள் செய்வது என்ன?
கம்ப்யூட்டரை பழுது பார்க்க இவர்களை அழைத்தால் UPS பழுது, அதை புதியதாகத்தான் மாற்ற வேண்டும். மானிட்டர் (டிஸ்பிளே) பழுது, அதை புதியதாகத்தான் மாற்ற வேண்டும், மதர் போர்டு பழுது, சிஸ்டம் பழுது இப்படி எல்லாமே போய் விட்டது என்று சொல்வதற்கு இன்ஜினியர் எதற்கு? கம்ப்யூட்டரை முழுமையாக சோதித்துப் பார்த்த பிறகு தான் எதையும் முடிவு செய்ய வேண்டும். அரைகுறை பயிற்சியினால் அதிக பொருட்செலவு உண்டாகிறது. கடலின் ஆழம் தெரியாமல் கப்பல் ஓட்ட முடியாது. அது சேற்றிலும், மணலிலும், பாறையிலும் மோதிவிடும். அதேபோல எலக்ட்ரானிக் பற்றி அடிப்படை விவரம் தெரியாதவர்கள் முழுமையான கம்ப்யூட்டர் என்ஜினியராக முடியாது.
இது போன்ற குறைகளைத் தவிர்ப்பதற்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் பற்றி தெரிய வேண்டுமானால் முதலில் மின்சாரத்தைப் பற்றியும், மின் சாதனங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். அதையடுத்து எலக்ட்ரானிக் உபரி பாகங்களைப் பற்றியும், அவற்றின் பயன்களைப் பற்றியும், அவை இயங்கும் விதம் பற்றியும் தெரிய வேண்டும். ஆகவே, இப் புத்தகத்தில் முதலில் எலக்ட்ரிகல் அதையடுத்து எலக்ட்ரானிக் என்றும், பிறகு UPS, மானிட்டர், சிஸ்டம் என்றும் தகுந்த வரிசைப்படி பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களை வரிசைப்படி தெளிவாக படித்து விட்டால் பிறகு எதிர் காலத்தில் வரக்கூடிய எல்லாவிதமான எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் சாதனங்களைப் பற்றியும் கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
நல்ல புத்தகங்களின் மூலமாக முறையாக படிக்காமல் சிறந்த கம்ப்யூட்டர் இன்ஜினியராக முடியாது.சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணி புரிந்தும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், பல எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் புத்தகங்களை எழுதியும் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப் புத்தகம் எழுதபட்டுள்ளது. இதற்கு முன்பாக நான் எழுதிய பல எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் புத்தகங்கள் யாவும் தமிழக நூலக ஆணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், எனது புத்தகங்களை படித்து தமிழகம் மற்றும் பல அயல் நாடுகளில் உள்ள மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். நீங்களும் எனது இந்தப் புத்தகத்தை படித்து பயன்பெற்றுசிறந்த ஹார்டுவேர் இன்ஜினியராகலாம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.