முகலாயக் பேரரசின் மைய அமைப்பு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: முகலாயக் பேரரசின் மைய அமைப்பு
ஆசிரியர்: இபின் ஹஸன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிவு: GHR-2-717
நுால்கள் அறிவாேம்
முகலாய வரலாற்றை கற்க நினைக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பாடநூலாகும். ஒழுங்கமைந்த ஆட்சி அமைப்பை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக்காப்பதிலும் அவர்கள் வகித்த பங்கை இந்நூல் திறம்பட எடுத்துரைக்கிறது. அக்பர் ஆட்சியில் ‘கால நிர்வாகம்’ எவ்வாறு திறம்பட பேணப்பட்டது என்பதும்; பின்னர் எதனால் அது கலகலத்தது என்பதும் இந்நூலில் சரியாக பதிவாகி உள்ளது. அரசாங்கத் துறைகள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கடமைகள், நீதி வழங்கும் திட்டம் ஆகியவை பற்றிய விளக்கங்களை இந்நூலில் பரக்கக் காணலாம். இந்நூலாசிரியர் நூல் வெளி வரும் முன்பே இறந்துவிட்டார். எனினும் சக வரலாற்றுப் பேராசிரியர்கள் முயற்சி எடுத்து இந்நூலைக் கொண்டு வந்தமைக்காகப் பாராட்டுகள். முஸ்லிம் என்றாலே வன்முறையாளர்கள் என்ற சித்திரத்தையே அறிமுகம் செய்யும் மத வெறியர்கள் உலவும் இந்நாளில் இந்நூலும் மதவெறி எதிர்ப்புப் போரின் ஆயுதமாகும்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
Comments
No comment yet.