மார்க்கம் சொன்ன மாமேதைகள்

மார்க்கம் சொன்ன மாமேதைகள்

 

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : மார்க்கம் சொன்ன மாமேதைகள்
தொகுப்பு : மவ்லவி எஸ்.லியாகத் அலி மன்பஈ
நூல் பிரிவு : IHR-3460

நூல் அறிமுகம்

இமாமுல் அஃலம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிலிருந்து துவங்கும் மாமேதகைளின் பட்டியல் குர்ஆனிலும் ஹதீஸிலும் பிக்ஹ் சட்டக்கலையிலும் மூழ்கி முத்தெடுத்த மார்க்கக் கலா மேதைகள், ஆன்மீகச் சுடர் ஒளிவீசச் செய்த ஆன்றோர் பெருமக்களை நம் கண்முன்னே நிறுத்தி அவர்களின் வாழ்வை அப்படியே பின்பற்றிடத் தூண்டும் கைவிளக்காக நம்மிடம் வந்திருக்கிறது இந்நூல்.

இந்நூலின் பொருளடக்கம்

1. இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்)
2. மதீனாவின் மாமேதை இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்)
3. ஷரீஅத்தின் சங்கநாதம் சட்டமாமேதை இமாம் ஷாபிஈ (ரஹ்)
4. அறப்போர் தியாகி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ருஹ்)
5. ஹனபீ மத்ஹபின் களஞ்சியம் இமாம் அபூ யூசுப் (ரஹ்)
6. மத்ஹபுகளின் சங்கமம் இமாம் முஹம்மத் (ரஹ்)
7. இணையில்லா நூல்கள் தந்த இமாம் நவவீ (ரஹ்)
8. தப்ஸீர் ஜலாலைன்தந்த இமாம் சுயூத்தி (ரஹ்)
9. கல்விக்கடல் இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
10. இறைவனை நினைத்து அழுத இமாம் அவ்ஜாயீ (ரஹ்)
11. சீர்திருத்தச் செம்மல் இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)
12. இருபதாயிரம் நூற்களைப் படித்த இமாம் இப்னு ஜெளஸி (ரஹ்)
13. இணையற்ற தஃப்ஸீர் தந்த இமாம் இப்னு கதீர் (ரஹ்)
14. மருத்துவஞானி இமாம் இப்னு ஸீனா (ரஹ்)
15. எழுபது ஹஜ் செய்த அதா இப்னு அபீரபாஹ் (ரஹ்)
16. தப்ஸீர் கபீரின் தந்தை இமாம் பஹ்ருத்தீன் ராஸீ (ரஹ்)
17. அடக்குமுறைக்கு அஞ்சாத இமாம் ஸயீதுப்னு ஜுபைர் (ரஹ்)
18. எழுத்துப்பணியில் ஏற்றம் கண்ட இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்)
19. பிரமிப்பூட்டும் எழுத்தாளர் இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் (ரஹ்)
20. மன்னர்களை மடக்கிய மாமேதை மகான் சுஃப்யானுத் தெளரீ (ரஹ்)
21. வித்ரியாவின் மூலவர் மாமேதை கத்தீப் பக்தாதீ (ரஹ்)
22. இமாம் காழீ இயாழ் (ரஹ்)
23. கனவி விளக்கக் கலாமேதை இமாம் முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்)
24. நஹ்வுக்கலை தந்த மேதை அபுல் அஸ்வது (ரஹ்)
25. ஹதீஸ் பிக்ஹ் கலைகளின் ஆசான் இமாம் தஹாவீ (ரஹ்)
26. தீனுக்கு உயிரூட்டிய மாமேத முஹ்யித்தீன் ஆண்டகை (ரஹ்)
27. ஹதீஸ் கலை மேதை இமாம் தாவூஸ் (ரஹ்)
28. இரும்பு மனிதர் இஸ்ஸுத்தின் (ரஹ்)
29. நபிமொழிகளின் நல்ஆசான் ஸயீதுப்னுல் முஸய்யப் (ரஹ்)
30. வாரி வழங்கிய வள்ளல் லைஸ் இப்னு ஸஃது (ரஹ்)
31. இறைமறையின் விரிவுரை வல்லுநர் இமாம் முஜாஹிது (ரஹ்)
32. நபிமொழிக் கலா மேதை உர்வத்துப்னு ஸுபைர் (ரலி)
33. வீரத்தியாகி ஹள்ரத் இஸ்மாயீல் ஷஹீத் (ரஹ்)
34. அற்புத நினைவாற்றல் கொண்ட மாமேதை அன்வர்ஷா ஷமீரி (ரஹ்)
35. மவ்லானா அப்துல் அலீம் சித்தீகி (ரஹ்)
36. உலகமே புகழ்ந்த இந்திய ஆலிம் அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)
37. அறிவு மேதை மவ்லானா அஷ்ரஃப் அலி தானவீ (ரஹ்)
38. அழுது அழுது பார்வையிழந்த இமாம் முஹம்மதுப்னுல் முன்கதிர் (ரஹ்)
39. மறைகளைக்கற்ற மாமேதை வஹ்பு இப்னு முனப்பஹ் (ரஹ்)
40. அக்பரின் தினே இலாஹியை அழித்த அஷ்ஷைகு அப்துல்ஹக் தஹ்லவீ (ரஹ்)

இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களின் வரலற்றை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.