நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்
ஒன்றை ஒன்று விஞ்சும்போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகவும் மிளிர்கின்றது.
ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பதே நோபல் பரிசாகும். அந்தப் பரிசைப் பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளரின் லட்சியமாகவும் கனவாகவும் உள்ளது.
ஆல்பிரட் நோபல் என்ற சுவீடன் நாட்டு வேதியியல் அறிஞரே இந்தப் பரிசினை உருவாக்கினார். தனது வேதியியல் அறிவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர், அளப்பரிய செல்வமும் சேர்த்தார். அந்தச் செல்வங்கள் பயனுடையதாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நோபல் பரிசினை நிறுவினார்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இலக்கியப் படைப்புகளில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் மிக அழகாக எடுத்து இயம்பியுள்ளார் 400-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த அரு.வி.சிவபாரதி.
இதுபோன்ற பயனுள்ள நூல்களை மேன்மேலும் படைத்து அவர் இலக்கிய வானில் சிறக்க பதிப்பகத்தார் சார்பாக வாழ்த்துகிறோம்.
அஞ்சுமன் அறிவகம்

Comments
Comments are closed.