நீரின்றி அமையாது நிலவளம் 

நீரின்றி அமையாது நிலவளம் 

நூல் பெயர் : நீரின்றி அமையாது நிலவளம் 
நூலாசிரியர் : முனைவர் பழ.கோமதிநாயகம் 
வெளியீடு : பாவை பப்ளீகேஷன்ஸ் 
நூல் பிரிவு : GAG -3203

நூல் அறிமுகம்

பேராவல்களுடனும் பெருங்கனவுகளுடனும் எதிர்பாராத தருணத்தில் மறைந்துவிட்ட பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ.கோமதிநாயகத்தின் மற்றொரு புதிய நூல், ‘நீரின்றி அமையாது நிலவளம்’.

பல்வேறு தருணங்களில் அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளில் பெரும் பாலானவை தொகுக்கப்பட்டு இங்கே நூல் வடிவம் பெறுகின்றன.

இந்தக் கட்டுரைகளில், தமிழர் பாரம்பரியத்தின் அடியொற்றி நீர், நிலம், சூழல், வளம் பற்றிய விரிவான தகவல்களுடன் ஆழமான வாதங்களையும் அக்கறைமிக்க கவலையையும் பதிவு செய்கிறார் முனைவர் பழ.கோமதிநாயகம்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டவை. பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. எனவே, சில கட்டுரைகளில் சில விஷயங்கள், சில தகவல்கள் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தந்தக் கட்டுரைக்கு அவசியமானவையாக இடம்பெற்றிருக்கும் அவற்றைத் தவிர்த்தால் கட்டுரையின் இயல்பான தொடர்ச்சி அறுபட்டுவிடும் என்பதால் உள்ளபடியே இடம்பெற்றிருக்கின்றன.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.