நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நபிமொழி திரட்டிய நல்லவர்கள்
தொகுப்பு : எம்.ஆர்.எம்.மனவை முஸ்தபா
நூல் பிரிவு : IHR-1100

நூல் அறிமுகம்

உலகிற்கு ஓர் அழகிய முன்மாதிரியாய் வந்துதித்த முகம்மதெம்மான் மொழிந்தவை, புரிந்தவை, தம் மன் நிகழ்ந்தவற்றை தடுக்காமல் ஒப்பியவை ஆகியவை வரும் மாந்தர்க்கு வழிகாட்டக்கூடியவை. எனவே அவை அவர்களுக்குப் பின் அழிந்திடாமல், மாந்தர் மனம் மறந்திடாமல் காப்பது கடன் என உணர்ந்த உத்தமர் சீலர் அதற்குத் தம் வாழ்வை அர்ப்பணித்தார்கள்.

உலக சுகங்கைள உதறித் தள்ளி, அறிவு தெரிந்த காலமுதல் கால்களுக்கு வலிமை வந்த காலமுதல் காதம் கடந்து ஹதீஸ்களை அறிந்தவர்களைக் கண்டு, அவர்களிடம் அவற்றைக் கேட்டுத் திரட்டிய அந்த நல்லவர் பன்னூறு பேர் ஆவர். அவர்களில் அறுவர் நம்பத்தகுந்த ஹதீஸ்களைத் திரட்டிய பெருமைக் குரியவர்கள்.

அவர்கள்,

1. இமாம் புகாரி (ரஹ்)
2. இமாம் முஸ்லிம் (ரஹ்)
3. இமாம் அபூதாவூத் (ரஹ்)
4. இமாம் திர்மிதீ (ரஹ்)
5. இமாம் நஸயீ (ரஹ்)
6. இமாம் இப்னு மாஜா (ரஹ்)

ஆகிய இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்களின் வாழ்வை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.