நபிமார்கள் வரலாறு (பாகம் ஐந்து)
நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (பாகம் ஐந்து)
மூல நூல் பெயர் : அல்பிதாயா வந்நிஹாயா
ஆசிரியர் : அரபி மூலம் அபுல் ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்) (கி.பி.1300/1372)
தமிழாக்கம் : மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
வெளியீடு : ஆயிஷா பதிப்பகம்
நூல் பிரிவு : IHR-02 3442
இந்நூலில்,
‘முஹம்மது நபிகளார் வரலாறு-1’ எனும் பெயரில் அமைந்துள்ள இந்நூலில் நபி முஹம்மத் (ஸல்) அவரக்ள் பிறப்பதற்கு முன்னர் நடைபெற்ற கஅபா புதுப்பித்துக் கட்டப்படுதல், ஸம் ஸம் கிணறு புதுப்பி்துத் தோண்டுதல், அப்துல் முத்தலிப் தம் புதல்வர்களில் ஒருவரை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்தல், அப்துல்லாஹ்விற்கு மண முடித்து வைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து நபிகளாரின் வரலாறு தொடங்குகிறது.
அதில் நபி பிறந்த விதம், பிறந்த நாளில் நிகழ்ந்த அற்புதச் சான்றுகள், நபி வளர்ந்த விதம், இளைஞராக இருந்த போது அல்லாஹ் பாதுகாத்தது, பிறகு மணமுடித்தது, வாலிபராக இருந்த போது கஅபா ஆலயம் குறைஷியர் புதுப்பித்துக் கட்டியது, இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வெளிப்பட்ட முன்னறிவிப்புச் செய்திகள், இறைத்தூதராக ஆனது, இறைச்செய்தியின் வருகை, அதற்காக வானில் பாதுகாப்பு ஏற்பாடு, இறைச் செய்தி வந்த விதம், பிறகு இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்தது, அப்போது முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியோர், அந்நேரம் நபியவர்களும் இஸ்லாத்தைத் தழுவியோரும் சந்தித்த கொடுமைகள் என ஒன்றன்பின் ஒன்றாக மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) அவரக்ள் சான்றுகளோடு எடுத்து விளக்குகிறார்கள்.
நபியவர்களின் வரலாற்றை அறிய முற்படுவோருக்கு இந்நூல் மிகச் சிறந்த நூலாகும். இதன் மூல அரபி நூலும் நமது அஞ்சுமன் அறிவகத்தில் இருக்கிறது. இவற்றை ஒரே இடத்தில் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.