நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் 

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் 

No automatic alt text available.

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் 
ஆசிரியர் : ஜைனப் காதர் சித்தீகிய்யா
பதிப்பகம் : சாஜிதா புக் சென்டர் 
நூல் பிரிவு : IHA-03

நூல் அறிமுகம்

இறைவன் உலகம் அழியும் காலம் வரை வாழும் மக்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் தங்களது இறுதித்தூதர் என்பதை உறுதிபடுத்தி, பறைசாற்றுவதற்காக முஹம்மது நபியின் மூலமாக பல முன்னறிவிப்புகளை அறிவிக்கச் செய்தான். அவைகளில் சில நபிகளார் வாழ்ந்த காலத்திலேயே நிறைவேறின.

சில அவர்கள் மரணித்த சில நாட்கள், சில மாதங்கள், சில வருடங்களுக்குள் நிறைவேறியுள்ளன. இன்னும் சில நாளையோ, நாளை மறுநாளோ நிறைவேறலாம். நபிகளார் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதாகவும், எல்லாத் துறைகளிலும் பரந்து நிற்பதற்கும் மிக முக்கியமான பல காரணங்களில் அவர்கள் அறிவித்த முன்னறிவிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய மிகச் சிறந்த நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்.

Share the Post

About the Author

Comments

Comments are closed.