தீரன் திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : தீரன் திப்பு சுல்தான்
ஆசிரியர் : குன்றில் குமார்
வெளியீடு : சங்கர் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4.1 2395

நூல் அறிமுகம்

அரச பரம்பரையைச் சாராத சாதாரண போர்வீரர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் மாவீரனாகவும் மானமன்னனாகவும் வாழ்ந்த வரலாற்றை உடையவர் ஹைதர் அலி.

அவரை விடவும் வீரத்திலும், தீரத்திலும், நிர்வாகத்திலும், பண்பிலும், மனித நேயத்திலும் இன்னும் அதிகம் சிறந்த விளங்கியவர் திப்பு சுல்தான்.

தென்னிந்தியாவைத் தனது திறமையால் வென்றவர் மாவீரன் திப்பு சுல்தான்.

ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாகப் போரிட்ட ஒரே மன்னர் திப்பு சுல்தான் என்றால் அது மிகையல்ல..

மாமன்னர்களாக வாழ்ந்த பலரும் ஆங்கிலேயருக்குத் தோள் கொடுத்து உதவிய நேரத்தில் அன்னிய ஆதிக்கத்தைத் துணிந்த எதிர்த்து நின்ற மாவீரன் திப்பு சுல்தான்.

மூன்று ஆங்கிலோ மைசூர் போர்களிலும் திப்புவை வீழ்த்த முடியாமல் ஏமாற்றமடைந்த ஆங்கிலேயர்கள், திப்பு சுல்தானின் தளகர்த்தர்கள் சிலரை நயவஞ்சகத்தாலும், பண பலத்தாலும் அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்தி, சுல்தானின் இரத்தத்தை உறிஞ்சினார்கள் என்பதே நிஜம்.

மதத்திற்கு அப்பால் மண்ணை நேசித்த ஒரு மாவீரனின் வரலாற்றை விளக்கும் நூல் இது.

இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.