தலித் மக்கள் மீதான வன்முறை
நூல் பெயர் : தலித் மக்கள் மீதான வன்முறை
மூலநூலாசிரியர் : எஸ்.விஸ்வநாதன்
தமிழில்:தா,நீதிராஜன்
வெளியீடு : சவுத் விஷன் புக்ஸ்
நூல் பிரிவு : GM-O2 –1702
நூல் அறிமுகம்
இந்நூல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க சமகால சமூக-அரசியல்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பிரண்ட்லைன் ஆங்கில சஞ்சிகையில் தொடர்ந்து 90களிலிருந்து 2000 வரை நடந்தேறிய தலித் மக்கள் மீது நடந்துள்ள அடக்குமுறை,அக்கிரமங்கள்,வானம்,உரை மட்டும் பதிவு செய்யாமல் அதற்கான காரணங்களை ஆழமாக ஊடுருவி தெளிவுப்படுத்தியுள்ளார்.ஒரு பக்கம் தலித் மக்களின் துன்ப துயர்களை வெளிப்படுத்தும் அதே வேளையில் அம்மக்களின் எழுச்சி,விழிப்புணர்வு,மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்கும் பண்பு ஆகிவற்றை படம் பிடித்து காட்டியுள்ளார். அவர் எழுதிய கட்டுரைகள் ஒரு செய்தி மட்டுமல்ல.அது வரலாற்று ஆவணம்.சமீபத்திய தகவல்படி மாநிலயத்தில் தலித் மக்கள் மீதான வன்முறை 2010 இல் 1631லிருந்து தற்பொழுது 2013-2014 இல் 1845 உயர்ந்துள்ளதாக வந்துள்ள அறிவிப்பு மிகுந்த வருத்துத்தை மட்டுமல்ல இக்கொடுமைகள் தொடர்வதையும் சட்டத்தின் ஆட்சி செத்து மெல்ல சவக்குழிக்குள் அடைக்கப்படுகிறது.மேலும் எம்மக்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறைகளை இந்த நூல் ஆழ்ந்து சுட்டிக்காட்டுகிறது,
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.