தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
ஆசிரியர் : செ.இராசு
வெளியீடு : KKSK கல்வி அறக்கட்டளை
நூல் பிரிவு : GHR-3

நூல் அறிமுகம்

ஒரு நாட்டு வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவையாகும். இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச் சிலர். அவர்களும் மேற்கண்ட பல பிரிவுகளைச் சேர்ந்த இன்றியமையாத இஸ்லாமிய ஆவணங்களைச் சிறிதும் பயன்படுத்துவது இல்லை. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி பெரும் அளவு நடைபெறாததே இதற்குக் காரணம் ஆகும்.

இந்நூல் அக்குறையை நீக்கி இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகள், செப்பேடு, ஓலைப்பட்டயம் போன்ற பலங்கால ஆவணங்களைத் திரட்டி ஒரே புத்தகத்தில் விவரித்திருக்கிறது. பன்னெடுங்காலமாக நிலவி வந்த இந்து-முஸ்லிம் ஒருமைப் பாட்டைச் சான்றுகளுடன் எடுத்துக் கூறும் 140 ஆவணங்கள் இந்நூலில் உள்ளன.

இந்நூலில் உள்ள பெரும்பான்மையான ஆவணங்களின் மையக்கருத்து மதநல்லிணக்கம் என்பதுதான். இந்துக் கோயில்களுக்கு இஸ்லாமியர்களும், இஸ்லாமிய பள்ளிவாசல், தர்காக்களுக்கு இந்துக்களும் பல கொடை கொடுத்துள்ளனர். அக்ரகாரத்திற்கு இலவசமாக கிணறு வெட்டிக்கொடுக்க அவர்களிடமே நிலத்தை ஒரு இஸ்லாமிய வள்ளல் விலைக்கு வாங்கியுள்ளார். என்பன போன்ற பல்வேறு தகவல்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உண்மைகள் ஆகும்.

இஸ்லாமியர்கள் அனைவரும் படித்து படிப்பினை பெறவேண்டிய அரிய தகவல்கள் அடங்கிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.