தனிமையின் வழி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GGA-2752
நுால்கள் அறிவாேம்
அற உணர்விற்கும் குற்ற உணர்விற்கும் இடையேஎப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிம்மதியின்மையின் நெருப்பிலிருந்து பிறந்தவை சுகுமாரனின் இக்கட்டுரைகள். வதைபடுதல்கள், சுயநிந்தனைகள், குடித்துத் தீராத கசப்புகள், ஒருபோதும் பதில் இல்லாத கேள்விகள், ரகசியமாகத் துடைத்துக்கொண்ட கண்ணீர்த் துளிகள், நெகிழ்ச்சியின் விம்முதல்கள் என விரியும் இந்நூல் சுயமழிந்த குரலில் நவீன மனித இருப்பின் சஞ்சலங்களை எதிர்கொள்கின்றன. உரைநடையில் தனது கவித்துவத்தின் சலுகைகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாத சுகுமாரன், கவிதையின் தீராத துயரத்தை இக்கட்டுரைகளிலும் தொடர்ந்து செல்கிறார்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.