சோமநாதா படையெடுப்பு 

சோமநாதா படையெடுப்பு 

நூல் பெயர் : சோமநாதா படையெடுப்பு 
ஆசிரியர் : ரொமிலா தாப்பர் நூலை முன்வைத்து …சஃபி 
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 
நூல் பிரிவு : GHR-5–1723

நூல் அறிமுகம்

கஜினி முகம்மது ஏன் சோமநாத ஆலயத்தின் மீது படையெடுத்தார். இந்துக்களின் விக்கிரக வழிபாடு பிடிக்காததினாலா? அல்லது அரேபியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மனத் தெய்வம் அங்கு வழிபடப் பட்டதினாலா? அல்லது கொள்ளையில் கிடைக்கும் செல்வத்தின் காரணத்தினாலா? அல்லது அரபு வாணிகர்கள் மேற்கிந்தியாவின் வழியாக குதிரை வாணிகத்தை மேற்கொண்டிருந்தனர். அது கஜ்னவி நகரின் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியான குதிரை வாணிகத்தைப் பாதித்துக் கொண்டிருந்தது. அதைக் களைவதற்காக அவர் போர் தொடுத்தாரா? அல்லது எல்லாக் காரணிகளின் கூட்டணிதான் அவரைப் படையெடுக்க வைத்ததா?

சிக்கலான வரலாற்று நிகழ்வுகளில் ஒரு சம்பவம் தேர்ந்தெடுக்கப்பட்டு நினைவு கூறப்படுப்படுவதில் அரசியல் செயல் படுவது போலவே, அந்தச் சம்பவம் தொடர்பான மற்ற அம்சங்களை மறப்பதிலும் ஒரு வித அரசியல் செயல்படுகிறது. கஜினி முகம்மது தொடர்பாக மறதியில் விடுப்பட்டுப் போன பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ரொமிலோ தாப்பர்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவன் மற்றொருவருடைய மதத்தினை மதித்து நடக்க வேண்டும். அப்படி மரியாதை காட்டுவதன் மூலம் ஒருவன் தன் மதத்தினையும் உயர்த்திக் கொண்டு மற்ற மதத்திற்கும் ஒருங்கே தொண்டு செய்பவனாகிறான், அவ்வாறு இல்லையெனில் தனது மதத்தின் அந்தஸ்தை குறைத்து விடுவதுடன் மற்ற மதத்திற்கும் தீங்கு செய்தவனாகிறான். ஒருவன் தன் மதத்தின் மேலுள்ள பக்தியினால் அதை உயர்த்திப் பிடித்து பிறருடைய மதத்தை தாழ்வாக கருதினாலும், நடத்தினாலும் தன்னுடைய மதத்திற்க்கே நஷ்டத்தை இழைத்து விடுகிறான். ஆகையினால் இணக்கமான வாழ்வே பொருத்தமானது.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.