சொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்

சொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : சொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்
தொகுப்பு : சையத் அப்துர் ரஹ்மான் உமரி
நூல் பிரிவு : IHR-1019

நூல் அறிமுகம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய துவங்கிய ஆரம்ப கட்டத்தில் நபிகளாருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய போது சத்திய இஸ்லாத்தை காக்க நபிகளாருக்கு தோள் கொடுத்து தமது உதிரத்தையும், உயிரையும், உடல் உறுப்புக்களையும், உழைப்பையும் உரமாகத் தந்தவர்கள் நபித்தோழர்கள்.

இஸ்லாத்தை வளர்ப்பதிலும், காப்பதிலும், கடைபிடிப்பதிலும் ஸஹாபாக்கள் காட்டிய ஆர்வம், தியாகம் ஈடு இணையற்றவை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய எண்ணற்ற பல நபித்தோழர்களைச் சுட்டிக் காட்டி சுவனச் செய்தியை அறிவித்துள்ளார்கள். அப்படி சுவனத்திற்கு உரியவர்கள் என்று நபிகளாரால் நற்சான்று பெற்ற பத்து தோழர்களின் தியாக வரலாற்றை இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

அந்த பத்து ஸஹாபாக்கள்

1. சையதினா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு
2. சையதினா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு
3. சையதினா உஸ்மான் கனீ ரலியல்லாஹு அன்ஹு
4. சையதினா அலீ ஹைதர் ரலியல்லாஹு அன்ஹு
5. சையதினா அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹு
6. சையதினா தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு
7. சையதினா ஸுபைர் அல்ஹவாரிரலியல்லாஹு அன்ஹு
8. சையதினா அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு
9. சையதினா ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு
10. சையதினா ஸஈத் இப்னுல் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு
இத்தகைய சிறப்பு வாய்ந்த நபித்தோழர்களின் வீர, தீர, தியாக வரலற்றை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.