சீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-1)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-1)
மூலம் : உமறுப் புலவர்
உரையாசிரியர் : மகாமதி சதாவதானி செய்குத் தம்பி பாவலர்
நூல் பிரிவு : IL-01 1266
நூல் அறிமுகம்
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமருப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும்.
இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்கு கூறப்பட்டதாகும்.
சீறாப்புராணத்திற்கு சதாவதாணி செய்குத் தம்பி பாவலர் அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூல் விளங்குகிறது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்நூலின் முதற்பாகம் இது. இதில் நபியவர்களது பிறப்பைப் பற்றிய செய்திகளைக் கூறும் விலாதத்துக் காண்டம் மற்றும் நுபுவ்வத்துக் காண்டம் ஆகியவை இந்நூலில் இடம் பெறுகிறது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய இடம் வகிக்கும் இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.