சமுதாய பிரச்சனைகளும் தீர்வுகளும்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சமுதாய பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆசிரியர் : டாக்டர் ஏ.பி.முகம்மது அலி (முன்னாள் டி.ஐ.ஜி
வெளியீடு : பஷாரத் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IG
நூல் அறிமுகம் (நூலின் முன்னுரையிலிருந்து…)
“என் இனிய சமுதாய மக்களே! கல்லூரி ஆசிரியர் மூன்றாண்டு, காவல் துறையில் 30 ஆண்டு பணியாற்றும்போது என் சமுதாய மக்களின் சேவைகளில் என்னை ஈடுபடுத்த முடியவில்லை. ஓய்வு பெற்ற பின்னர் சமுதாய நிறைகுறைகளை என் கவனத்திற்கு வந்ததினையும், குறைகளை களைய தேவைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டம் என நினைத்து கட்டுரைகளாக உங்களுக்குத் தந்துள்ளேன்.
நாம் படிப்பிலும் – வேலை வாய்ப்பிலும் தலித் சமுதாயத்தினை விட பின்தங்கி இருக்கிறோம் என்று நீதிபதி சச்சார் அவர்கள் அரசுக்கு அளித்த அறிக்கையினை சுட்டிக் காட்டி, அதற்கு எவ்வாறு பரிகாரம் தேடி அரசு உயர் பதவியினையெல்லாம் பெறலாம்? என்பதினையும்,
நாம் வெறும் வியாபாரிகளாக அல்லாமல் மற்ற சமூக மக்களைப் போல தொழில் முனைவர்களாக மாற வேண்டம் என்ற கருத்தினை ஆணித்தரமாக எடுத்துரைத்தும்,
மனமுறிவுகளை களைய என்ன வழிமுறைகள் என்ற விபரத்தினையும், மனநோய்களுக்கு கவனம் கொடுத்து களையாமல் மூட நம்பிக்கையில் அவர்களை தனிமைப்படுத்திக் கொடுமைக்கு ஆளாக்குவதினையும், இந்துத்துவா என்ற படமெடுக்கும் பாம்பாக இருக்கும் தீவிரவாதத்திடமிருந்து நம்மை எவ்வாறு காப்பது என்றும், எவ்வாறு நமது இளைஞர்கள் வளைகுடா நாட்டில் வேர்வை சிந்தி தேனீ கூட்டில் தேன் சேகரிப்பது போல் சேகரிக்கிறார்கள் என்றும் அதனை வார்த்தை ஜாலங்களால் வாழ்வு நடத்தும் சில முஸ்லிம் பெரியோர்கள் அவர்களிடம் வசூலித்த நன்கொடைகளை எவ்வாறெல்லாம் பைத்துல்மல் பணம் என்றும் பாராமல் அபகரிக்கிறார்கள் என்பதினையும்,
21 ஆம் நூற்றாண்டில் சமுதாயம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதினையும்,
போன்ற பல்வேறு விஷயங்களையும் அதன் தீர்வுகளையும் கட்டுரைகளாக அளித்துள்ளேன்”.
முன்னால் காவல்துறைப் பணியில் இருந்த இந்நூலாசிரியர் தமது அனுபவத்தில் உதித்த விஷயங்களை தொகுத்துத் தந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் படித்துணர வேண்டிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.