குழந்தை வளர்ப்பு அறிவியல்

குழந்தை வளர்ப்பு அறிவியல்

Image may contain: 3 people, people smiling

நூல் பெயர் :குழந்தை வளர்ப்பு அறிவியல்
ஆசிரியர் :ஸ்டீவன் ருடால்ஃப்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் 
பிரிவு : IF-02

நூல் அறிமுகம்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.

உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?

இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனை-களைப் பல்வேறு உண்மை உதாரணங்-களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.

குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும்?இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால்?உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.

/ Health Care

Share the Post

About the Author

Comments

Comments are closed.