காதரீன் மேயோ ஏற்பும் – மறுப்பும்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : காதரீன் மேயோ ஏற்பும் – மறுப்பும்
ஆசிரியர்கள் : காதரீன் மேயோ, கோவை.அ.அய்யாமுத்து,மனோரஞ்சன் ஜா, வ.ரா, சி.எஸ்.ரங்கய்யர்
பதிப்பகம் : விடியல் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-5–725
நூல் அறிமுகம்
ஐரோப்பியர் ‘இந்தியா’ என்று இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் ஊடுருவியதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான உரையாடல் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது. காலனியம் எனும் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டின் நிகழ்வு குறித்துப் பல்பரிமாணப் பதிவுகளை இன்றைய கண்ணோட்டத்தில் செய்ய வேண்டும். அவ்வகையான செயல்பாட்டிற்கு உதவும் ஆவணமாக காதரீன் மேயோவின் ‘இந்திய மாதா’ நூல் தொடர்பான உரையாடல்கள் உதவும்…
-‘இந்தியா’ எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப்பட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதன் அவசியம்.
-‘நாடு’ எனும் கருத்துநிலை, எந்தெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனையாளர்களாலும் புரிந்து கொள்ளப்படுகிறது.
-தேசியம் எனும் கருத்துநிலையை காலனியம் எவ்வாறு உருவாக்கியது.
மொழி, மதம் ஆகியவைகளின் செயல்பாடுகள் எவ்வகையில் அமைகின்றன.
ஆகிய பிற குறித்து இன்றையப் பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.
இத்தகைய நூல்களை படித்து பயன் பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.