காகித மலர்கள்

காகித மலர்கள்

வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள். Mob Psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், ‘நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?’ என்ற Play Safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில ‘தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள்-என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurity இன், ஒரு alienation இன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ‘காகித மலர்கள்’ அறிமுகம் செய்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.