ஒரு தமிழ்ப் பாமரனின் பயணம்
நூல் பெயர் : ஒரு தமிழ்ப் பாமரனின் பயணம்
நூலாசிரியர் : மு.தனராசு
வெளியீடு : வைகை பதிப்பகம்
நூல் பிரிவு : GN-4037
நூல் அறிமுகம்
நாம் தமிழர்களா? திராவிடர்களா? இந்தியர்களா? நம்மில் முப்பாட்டன் தலைமுறைக்கு முந்தியவர்களின் பெயர் தெரிந்தவர்கள் எத்தனை பேர்?
தமிழர்கள் இந்துக்களாக மாறியது எப்போது?
திருவள்ளுவர் என்றொருவர் இருந்தாரா?
அவர் பூணூல் போட்டிருந்தாரா? ஆதிபகவன் மகனா?
இராமாயண நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றனவா?
இந்தியாவில் கலாச்சார அடிநாதமாகப் பார்ப்பனியத்தைத் தவிர வேறு ஏதேனும் பண்பாட்டுணர்வு இருக்கிறதா?
தமிழை 24 எழுத்துக்களில் எழுதமுடியுமா?
“வெள்ளையனை வெளியேற்றுவோம்” என்பதும்
“வெள்ளையனே வெளியேறு” என்பதுவும் ஒன்றா?
உயிர் என்றால் என்ன?
புவிஉருண்டைஉயிரினங்கள் எப்போது எப்படித் தோன்றின?
ஐம்புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட உலகம், அறிவு, உண்டா?
மதமூடத் தனங்களில், முஸ்லீம், கிறிஸ்தவ, இந்து, பவுத்த மூடத்தனங்களில் பெரியவை, சிறியவை உண்டா?
சமூகத்தின் அனைத்துப் பகுதிகளும் சரிசெய்ய முடியாத அளவுக்குக் கெட்டுப் போகக் காரணம், தனிமனிதர்களா?
தனிச் சொத்துடைமையா?
உழைப்பு என்பது எது?
சொத்து சேர்க்க அலையும் அலைச்சல் உழைப்பாகுமா?
தேசிய, இன, மொழி உணர்வுகள்
பொதுவுடைமைப் புரட்சிக்கு எதிரானவையா?
புரட்சியை நடைமுறைப்படுத்துவதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியா?
கமியூனிஸ்ட் கட்சியை நடத்துவதற்குப் புரட்சியா?
சோவியத்து ஒன்றியத்தில் பொதுவுடைமை அமைப்பு இருந்ததா?
சீனாவின் புதிய ஜனநாயகப் புரட்சியால் பொதுவுடைமை அமைப்பு உண்டானதா?
மார்க்சியம் என்பது அரசியலா? அல்லது மனித சமுதாயத்தைப் பண்படுத்திக் கட்டமைக்கின்ற ஒழுங்குமுறையா?
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.