இந்தியா: வரலாறும் அரசியலும்

இந்தியா: வரலாறும் அரசியலும்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : இந்தியா: வரலாறும் அரசியலும் 
ஆசிரியர்     : டி.ஞானய்யா 
பதிப்பகம்   : விடியல் பதிப்பகம் 
நூல் பிரிவு  : GHR-02–398

நூல் அறிமுகம்

இந்தியா ஒரு தேசமல்ல, பல தேசங்களை (NATIONS) கொண்டது. இது ஓர் துணைக்கண்டமுமல்ல. ஐரோப்பா போன்று ஒரு முழுக்கண்டம். ஐரோப்பாவின் வரலாறு போன்றதுதான் இந்தியவரலாறும் அமைந்துள்ளது. ஐரோப்பா முழுவதும் ஒத்தஇனம். இந்தியாவில் ஆரியர், திராவிடர், மங்கோலியர் என வேறுபட்ட இனங்கள். ஐரோப்பா முழுவதும் பல தேசமக்கள். ஆனால் ஒத்தநிறம், தோற்றம், கலாச்சாரம் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. ஐரோப்பா முழுவதும் ஒரே மதம், கிறித்துவம். இஸ்லாமியர் வருகைக்கு முன் இந்தியாவில் மதம் என ஒன்று இருந்ததில்லை. இன்று பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், ஜாராஸ்ட்ரியம் (பார்சி) மதங்களைச் சார்ந்தவர்களால், மதத்தால் வேறுபட்டிருக்கின்றனர்…

… இந்திய வியாபாரிகள் பிரிட்டிஷ் ஆட்சியில் ஆதாயம் பெறுபவர்களானார்கள். போரில் கொள்ளையடித்த பொருள்களை ஆங்கிலேயரிடமிருந்து விலைக்கு வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். சென்னையிலிருந்த செட்டியார்களும், வடக்கே மார்வாரி ஜைனர்களும், குஜராத்திகளும், தரகு வியாபாரிகளாகவும் ஆங்கிலவர்த்தகர்களுக்கு ஏஜண்டுகளாகவும் மாறிவிட்டார்கள். பம்பாயில் பார்சிகள், நிரந்தரமாக குடியமர்ந்து வாழ்ந்துவந்த குஜராத்தி வர்த்தகர்கள், உதவியால்தான் ஆங்கிலேயர்களால் ஏற்றுமதி செய்வதற்கான சரக்குகளைத் திரட்ட முடிந்தது. குஜராத்தியர் மற்றும் மார்வாடி தரகுவர்த்தகர்கள் ஆங்கிலேயர்களுடன் மிகவும் ஒத்துழைத்து கணிசமான லாபம் ஈட்டினர். இவர்கள் விவசாயிகளைச் சுரண்டிக் கொழுத்தனர். ஆங்கிலேயரின் தொழிற்சாலைகளில் பங்காளிகளானார்கள்…

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.