ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GHR 3
*இவ்வருட புதிய வரவுகள்*

தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. , – ஆர். பாலகிருஷ்ணன் ~

தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் உத்திகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறார். நல்ல தருணத்தில் வந்துள்ள வரவேற்கத்தக்க நூல்.
– சு. தியடோர் பாஸ்கரன் ~

இந்நூல் மூலமாக தொல் தமிழ் காலத்தையும் நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற ஒப்பற்ற நாகரிகப் பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும்.
– ஆ. பத்மாவதி ~

தொல்லியலில் ஆர்வத்தைத் தூண்டுதல்; தொல்லியல் ஆர்வலர்களுக்கு எளிமையாய்ப் பண்டைய நாகரிகக் கூறுகளை ஆதாரத்துடன் தருதல் என்ற இருவகைப் பயன் கொண்டது இந்நூல். ஆய்வாளர்களுக்கும் கூட, ஒரு உடனடிப் பார்வை நூலாக விளங்கும் தகுதியும் இதற்குண்டு. –
நா.மார்க்சிய காந்தி ~

கீழடியில் தட்டிய பொறி கொண்டு தமிழகத் தொல்லிட ஆய்வுகளை மேற்கோள் காட்டி படைத்திட்ட இம்மதிப்புமிகு நூல் எல்லோராலும் வரவேற்கத்தக்கப் படைப்பாகத் திகழும்.
– மு. சேரன்
*அஞ்சுமன் அறிவகம்*

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.