அறிவிற்கு விருந்தாகும் அறிய தகவல்கள் 

அறிவிற்கு விருந்தாகும் அறிய தகவல்கள் 

நூல் பெயர் : அறிவிற்கு விருந்தாகும் அறிய தகவல்கள் 
ஆசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி. 
வெளியீடு : தாமரை பப்ளீகேஷன்ஸ்
நூல் பிரிவு : GW–2424

நூல் அறிமுகம் :

ரத்த ஓட்ட முறையைக் கண்டுபிடித்த வில்லியம் ஹார்வி. புத்தகம் படிப்பதில் பெரும் விருப்பம் கொண்டவர். மைகேல் புத்தகப்பிரியர். இதனால் பிற்காலத்தில் விஞ்ஞானி ஆனார். அமுட்சென் ஒரு புத்தகப் பிரியர். இதனால் துருவ முனைகளுக்குச் செல்ல 12 வயதிலேயே தீர்மானித்து அதன்படி பிற்காலத்தில் சாதித்தார். புத்தகங்களால் தான் ஊக்கம் பெற்றேன் என்றார் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். எனவே, தினமும் ஒரு மணிநேரமாவது சுய முன்னேற்றம், பொது அறிவு, வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களுள் ஒன்றையாவது படித்து வாருங்கள். வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்று இதனால் அதிகரிக்கும்.

ஒஷோ ரஜனிஷும் இதையே தான் திருப்பித் திரும்பிச் சொல்கிறார். தனது 650 நூல்களிலும்! சிந்தனைகளால் குழப்பிக் கொள்ளாமல். ஒவ்வொருநாளும் மகிழ்ச்சியாக வாழுங்கள் இதனால் நீங்கள் சரியாக வாழ்வீர்கள். ஆக, கடமையை முழு விருப்பத்துடன் செய்ய ஆரம்பித்தாலே மகிழ்ச்சியும் வெற்றியும் தொடர்வதை ஒவ்வொரு வரும் உணர முடியும்.

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும். கடமையை முழு விருப்பத்துடன் செய்து இந்த உலகில் என்ன நடக்கிறது? என்பதைப் பற்றியும் தினமும் தெரிந்து கொள்வீர்கள். இதனால் மூளை நலமும் பாதுகாப்பாக இருக்கும். பொது அறிவிற்க்கே தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் உலகத்தை நேசத்துடன் பார்த்து வாழச் செய்யும் சக்தி உண்டு. அதற்கு இந்த நூலில் உள்ள தகவல்கள் உதவும் என்பது உறுதி.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.