அசைவ உணவு

அசைவ உணவு

நூல் பெயர் : அசைவ உணவு
ஆசிரியர் : ம.லெனின்
வெளியீடு : வானவில் புத்தகாலயம்
நூல் பிரிவு : GRC-812

நூல் அறிமுகம்

பெரும்பாலான அசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளாத ஒரே காரணத்தினாலேயே அவற்றை உண்ணாமல் இருப்பவர்கள் அநேகர். அசைவப் பண்டங்களைச் சுத்தம் செய்வது என்பதில் பெரிய தொழில்நுட்ப இரகசியம் அடங்கியிருக்கிறது. நமது பாட்டிமார்கள் எப்படிக் கோழிகளை அறுத்துக் குழம்பு வைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தயார் நிலையில் கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு நாம் பழகி விட்டோம். நாமே சுத்தம் செய்து சமைத்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும். இவற்றைக் கற்றுத் தரும் வேலையைக் கல்லூரிகள் செய்வதில்லை. செவிவழி செய்தியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டால் தான் உண்டு என்பதே இன்றைய நிலை. மக்களின் தேவை வளர்ந்து கொண்டே வரும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில் சத்தமில்லாமல் பெரும் புரட்சி ஒன்றைச் சாதிக்க உங்களுக்கு இது உதவும். சுத்தம் செய்து தருவதையே ஒரு தொழிலாகவும் செய்யலாம். அதற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் சில நுணுக்கங்களின் தொகுப்பு இது. இது சுவைப்படச் சமைக்க விரும்பும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குப் பதிலாக அடுப்படிகளில் வெந்து தணிகிற ஆண்களுக்கும் இது பெரும் பரிசாக அமையும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.