வெற்றி

வெற்றி

நூல் பெயர் : வெற்றி 
மூலநூலாசிரியர்: ஆரிசன் ஸ்வெட் மார்டன்
தமிழாக்கம்: எம்.சீனிவாசன் 
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு: GMA- 1545

நூல் அறிமுகம்

நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்டின் சரித்திரம் மிக ருசியானது.அவர் சிறுவராக இருந்த போது கண்ணாடி விற்பதற்காக ஒரு கடைக்கு நகராட்சியின் லைசென்ஸ் கேட்டுள்ளார்.மறுக்கப்பட்டுள்ளது.க்ளாஸ்க்கோவுக்கு சென்று அங்கு வியாபாரம் செய்ய நினைத்தார்,அங்கும் லைசென்ஸ் மறுக்கப்பட்டது.கலாசாலை வளாகத்தில் சிலருடைய நட்பு கிடைத்தது.அங்கு கடையை திறக்கலாம் என்று யோசனை தெருவித்தனர்.நேரம் முழுவதும் அதிலே செல்வாகும்படி விற்பனை தொழில் அவர் வாழ்வில் அங்கம் வகித்தது.இருந்தும் ஓய்வு நேரங்களில் தான் காணும் பழுது இயந்திரங்களை பழுத்துப் பார்த்துள்ளார்.அவை வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்தன.அயல் நாட்டு இயந்திரங்கள் பற்றிய புத்தகங்கள் பார்த்தார்.மொழி அகராதி ஒன்றை வாங்கி அதன் உதவியால் புத்தகங்கள் படித்தார்.அங்குள்ள பேராசிரியர்கள் அனைவரும் சுவர் செயல்களை கூர்ந்து கவனித்து ஆச்சரியப்பட்டனர்.கலாசாலை வளாகத்தில் உள்ள ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது.அதை அவரிடம் கொடுத்தனர்,பழுது நீக்கி முன்போல் இயங்க வைத்தார்.ஏன்,ஓர் புது இஞ்சினை போலவே இயங்க ஆரம்பித்தது.ஜேம்ஸ் வாரத்தின் மகத்தான படைப்பாற்றல் உலகமெங்கும் பிரசித்துப்பெற்றது.இதன் மூலம் அமெரிக்க தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. இது போன்ற நூற்றுக்கணக்கான வெற்றி கதைகளை இந்நூல் விளக்கியுள்ளது.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.