வீட்டு வைத்தியம்

வீட்டு வைத்தியம்

நூல் பெயர் : வீட்டு வைத்தியம் 
நூலாசிரியர் :ஸ்ரீஹரி 
வெளியீடு :விகடன் பிரசுரம் 
நூல் பிரிவு :GMD–4149

நூல் அறிமுகம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டு வரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பரியமான பொருட்களை கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல்.

வீட்டு வாசலில் முளைத்து இருக்கும் கீழாநெல்லி முதல் வீட்டு முற்றத்தின் துளசி தொடங்கி தோட்டத்தில் காய்கறிகள் அடுப்பறை அஞ்சறை பெட்டியின் மிளகு, சீரகம், மஞ்சள் வரை அனைத்துமே மூலிகையாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அது மனிதனுக்கு நோயற்ற வாழ்வை அளிக்க கூடியே பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உபாதைகளையும் அவற்றை தடுக்கும் முறைகளையும் போக்கும் வழிகளையும் எளிய முறையில் அனைவரும் பயனடைந்து ஆரோக்கியம் பெறும் வகையில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.

விரும்பி உண்ணக்கூடிய காய்கறிகளை விட நாம் ஒதுக்கும் காய்களில்தான் மருத்துவக் குணங்கள் ஏராளம் புதைந்து கிடக்கின்றன. முள்ளங்கி என்றாலே சிறியோர் முதல் பெரியோர் வரை ஓட்டம்தான். ஆனால் அதன் வாசமும் காரலுமே உடல் உறுப்பு நலன் அழியாமல் காத்து, சிறுநீரகத்தை சீரடையச் செய்கிறது.வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையினால் உண்ண மறுப்பது அவற்றின் ஆரோக்கியத்தையும் சேர்த்து ஒதுக்குவதாகும்.

எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள இந்த வைத்திய முறைகளை எளிதில் கையாண்டு ஆரோக்கிய வாழ்வை உறுதியாக்கிட, உங்களுக்கு இந்த நூல் வழிகாட்டும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *