பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்

பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்

 

 

 

 

 

 

 

நூல் பெயர் : பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்
ஆசிரியர் : அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்
நூல் பிரிவு : GL-2104

இந்நூலின் ஆசிரியர் உரையிலிருந்து சில தகவல்கள்,

நீதியைத் தேடி நெடும் பயணம் செய்தவர்களில் எனக்குத்தான் முதலிடம். கடந்த 22 ஆண்டுகளாக எனது நீதிப் போராட்டத்தி்ல் என்னளவுக்குப் போராடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதில் கிடைத்த அனுபவப் பயன்தான் இந்த பாமரர்க்கான சட்டங்கள்.

மூல சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. ஆங்கிலம் ஒரு மாயமொழி. அது நினைத்த பொருள் எல்லாம் தரும். தமிழில் அதை மொழி பெயர்க்கிறவர்களும் பயந்து பயந்து செய்வதால் தமிழில் வெளிவந்த சட்டப் புத்தகங்களைப் படித்தாலும் புரிவதில்லை. சட்டப் புத்தகங்கள் வெளியிடுபவர்கள் மேல் கோர்ட் தீர்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஒவ்வொன்றும் தலையணைபோல் உள்ளது. இவை அனைத்தும் பீரோவில் வைத்து அழகு பார்க்கத்தான் பயன்படும். இந்தப் புத்தகமோ எப்போதும் கையிலேயே எடுத்துச் சென்று கதைப் புத்தகம் படிப்பது போல் படிக்கலாம்.

“மாங்காய் ருசியா? மாம்பழம் ருசியா?” என்று சிறுவர்களிடம் கேட்டால் “மாங்காய்தான் ருசிக்கும்” என்பார்கள். இந்த சிறுவர்களைப் போலத்தான் புரியாத சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறோம். நான் மாம்பழத்தை தோலைச் சீவி, கொட்டையை நீக்கி, சுளைசுளையாக அறுத்து தட்டில் வைத்திருப்பதுபோல் இதைத் தருகிறேன். எடுத்து சுவையுங்கள்.

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.