தேர்வு வாழ்கையும் வாழ்க்கைத் தேர்வும்

தேர்வு வாழ்கையும் வாழ்க்கைத் தேர்வும்

Image may contain: 1 person

அஞ்சுமன் அறிவகம்*
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: தேர்வு வாழ்கையும் வாழ்க்கைத் தேர்வும்
ஆசிரியர் : இரா. ஆனந்த குமார்
பதிப்பகம் : விகடன் பதிப்பகம்
பிரிவு : GE-4175
நுால்கள் அறிவாேம்
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை… வாழ்க்கையைத் தேர்வு செய்ய!
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

*அஞ்சுமன் அறிவகம்*

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.