திப்பு சுல்தான்

திப்பு சுல்தான்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : திப்பு சுல்தான் 
ஆசிரியர் : மொஹிபுல் ஹஸன் 
வெளியீடு : எதிர் வெளியீடு 
நூல் பிரிவு : GHR-4.1

நூல் அறிமுகம்

இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதப்பட்டிருக்க வேண்டிய பெயர் திப்புவுடையது. கிரேக்க புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலசைப் போன்ற திப்புவை மறந்துவிட்டு/ மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு இந்நூல் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

அதேவேளையில் திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும் அவரது இராணுவமும் அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசயமும் இன்றைய நிலையிலிருந்து பலபடிகள் முன்னிற்கின்றன.

பல்வேறு ஆய்வுகளின் மூலம் திப்புவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை, சமூகத்திற்கு தனது பங்களிப்பாக இந்நூல் மூலம் தந்திருக்கும் மொஹிபுல் ஹஸன் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர். முதுபெரும் வரலாற்றுப் பேராசிரியர். அலிகார் பல்கலைக்கழகத்திலும் காஷ்மீர் பல்கலைகழகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தவர். புது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவியவரும் முதல் பேராசிரியரும் ஆவார்.

திப்பு சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஏற்ற இந்நூலைப் படித்து பயன்பெற
இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.