தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-3

தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-3

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-3
வெளியீடு : அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி
நூல் பிரிவு : IQ-02-1 1276

நூல் அறிமுகம்

இந்நூலின் மூன்றாம் தொகுதி இது. திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயமான அந்நிஸாஉ அத்தியாயத்தின் விளக்கவுரை அமைந்துள்ளது.

உலகப்பொதுமறையாக திகழ்கின்ற திருக்குர்ஆனின் வசனங்களுக்கு சரியான மொழிபெயர்ப்பு தருவதும், அதன்பின் விரிவான விளக்கவுரை செய்வதும் எளிதான காரியமன்று.

ஒவ்வொரு வசனத்திற்கும் மொழிபெயர்ப்பும் விளக்க உரையும் இறையருளால் நன்கு ஆய்வு செய்த பின்னரே தரப்பட்டுள்ளன.

அந்நிஸாஉ என்னும் இந்த அத்தியமானது முக்கியமான பல்வேறு அம்சங்களையும் செய்திகளையும் பொதிந்ததாகும். அனாதைகள் பராமரிப்பு, அவர்களின் சொத்து பாதுகாப்பு, பலதாரமணம், பெண்களின் சொத்துரிமை, இல்லறத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள், உறவினரை அரவணைத்தல், பாகப்பிரிவினை சட்டங்கள், நேர்மையான வருவாய், நாணயமான வணிகம், சிறிய பெரிய பாவங்கள், அவற்றின் பரிகாரங்கள், பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள், நபியின் இஜ்திஹாது, இஜ்மாஉவின் சட்டங்கள், ஜிஹாதின் சட்டங்கள் போன்ற முக்கியமன விஷயங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

இயன்றவரை ஒவ்வொரு கருத்தையும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாகவும் வழங்கியுள்ளோம். (ஆதாரங்களை அடிக்குறிப்புகளில் காண்க)

திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் வரலாற்று குறிப்புகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக, சம்பவங்கள் நடந்த இடங்களில் வரைபடங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் கலைச்சொல் அட்டவணையும் தரப்பட்டுள்ளது.

அனைவரும் படித்து உணர்வதற்கு வசதியாக எளிய நடையில் விளக்க உரை அமைந்துள்ளது.

இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ Islamic Tamil, Tamil Quran

Share the Post

About the Author

Comments

Comments are closed.