சாதனையாளர்களின் சரித்திரம்

சாதனையாளர்களின் சரித்திரம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Image may contain: 1 person, text

 

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : சாதனையாளர்களின் சரித்திரம்
ஆசிரியர் : முகில்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GHR-4.5

பல்வேறு துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகாண விரும்பியும் இவ்விடத்தைப் பெறுபவர்கள் வெகு சிலரே! நம்பர் 1 ஆகத் திகழ்ந்த, திகழும் சாதனையாளர்கள்,
தங்கள் திறமையால் வெற்றியடைந்தார்கள் என்பதோடு அவர்களில் பலர் சிறுவயதில் பல அவமானங்களையும் வலிகளையும் எதிர்கொண்டவர்களே. அந்த வலிகளும் காயங்களுமே அவர்களை முதலிடத்துக்கு அழைத்துச் சென்ற முக்கிய காரணிகள். மொழி வேறுபாடு, இன வேறுபாடு, நிற வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தந்த சமூகத்தின் மத்தியில் தான் ஒதுக்கப்பட்டாலும் தங்களின் தரத்தை உயர்த்த போராடியவர்களின் உழைப்பு, விடாமுயற்சி, எடுத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற உள்ள உறுதி, இவையே ஒவ்வொருவரையும் நம்பர் 1 ஆக்கும் சூத்திரங்கள். அப்படி நம்பர் 1 ஆன வெற்றியாளர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நம்பர் 1 இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. பிறவியிலேயே கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்த நிக் என்பவர் இன்று உலகம் முழுதும் சென்று உரையாற்றி வருகிறார். ‘என் வாழ்வில் ஏதாவது அதிசயம் நிகழுமா என காத்திருக்கிறாயா, நீயே அதிசயமாக மாறிவிடு’ – என்கிற இவர், தன்னையே தன்னம்பிக்கையின் அடையாளமாக்கி நம்பர் 1 மனிதராகத் திகழ்கிறார். இதுபோன்ற மனதுக்கு ஊக்கம் தரும் எத்தனையோ நம்பர் 1 மனிதர்களைப் பற்றி, சுவை குன்றாத வார்த்தைகளால் பரிமாறியிருக்கிறார் நூலாசிரியர் முகில்! பல சோதனைகளைக் கடந்து, உழைப்பாலும் விடா முயற்சியாலும் உயர்ந்து வெற்றியின் உச்சத்தைத் தொட்ட நம்பர் 1 மனிதர்களை சந்தித்திட பக்கங்களைப் புரட்டுங்கள்!

 

/ General English, General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.